நிலாவரைக் கிணற்றினுள் வீழ்ந்து விரிவுரையாளர் தற்கொலை!

யாழ் . பல்கலைக் கழக புள்ளிவிபரவியல் துறை விரிவுரையாளரும் வல்லிபுர ஆழ்வார் ஆலய மகாசபைத் தலைவருமான சரவணமுத்து தேவதாசன் என்பவர் இன்று காலை நிலாவரைக் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று காலை 10.30 மணியளவில் குறித்த பகுதிக்கு வந்த இவர் நிலாவரைக் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து நிலாவரை கிணற்றில் குறித்த நபரது உடலத்தை பொலிஸார் தேடி அது கிடைக்கப்பெறாமையால் நிலாவரைக் கிணற்றில் சடலத்தை மீட்க மீட்புப் படையினரை பொலிசார் வரவளைத்திருந்தனர்.
தற்கொலை செய்துகொண்ட சரவணமுத்து தேவதாசன் என்பவர் பருத்தித்துறை கற்கோவளத்தைச் சேர்ந்த என்பது குறிப்பிடத்தக்கது..
Related posts:
வித்தியா கொலை: விடுதலையான நபருக்கு மீண்டும் விளக்கமறியல்!
கட்சி செயலாளர்கள் - மாவட்ட செயலாளர்களுடன் விசேட கலந்துரையாடல்!
க.பொ.த உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் மீண்டும் ஒத்திவைக்க நேரிடும் - இராஜாங்க அமைச்சர் சுச...
|
|