நிலவும் மிக வரண்ட காலநிலை – தோல் நோய்கள் அதிகரித்து வருவதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரிக்கை!
Monday, February 12th, 2024நாட்டில் தற்போது நிலவும் மிகவும் வரண்ட காலநிலை காரணமாக தோல் நோய்கள் அதிகரித்து வருவதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்நிலைமையானது சிறுவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ள சிறுவர் களுக்கு கூட இந்நாட்களில் குளிப்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
சிறுவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு தடவைகளாவது குளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும், ஒருவருக்கு தோல் நோய்கள் இருப்பின் காலையிலும் இரவிலும் சுமார் 20 நிமிடங்களேனும் நீரில் இருப்பதன் மூலம் ஓரளவு கட்டுப்படுத்த முடியும் எனவும் வைத்தியர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
இனவாதம், மதவாதத்தைத் துண்டும் இணையங்களுக்குத் தடை!
பாதீடு மீதான வாக்கெடுப்பு ஏப்ரல் மாதம்!
அனைத்து பாடசாலைகளிலும் இதுவரையில் ஆரம்பிக்கப்படாத தரங்களின் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கள்ம...
|
|