நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு – யோசனையை வரவேற்பதாக நாமல் ராஜபக்ச அறிவிப்பு!

Thursday, April 21st, 2022

சஜித் பிரேமதாசவினால் சபையில் முன்வைக்கப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறைமையை நீக்குவதற்கான யோசனையை வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது உள்ளிட்ட அரசியலமைப்பில் புதிய திருத்தம் ஒன்றை முன்வைக்கும் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகரிடம் கையளித்திருந்தது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதற்கான பிரேரணையை கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவிடம் இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கையளித்திருந்தார்..

இதனையடும் இந்த பிரேரணை கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவினால் இன்று காலை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்தல், 20 ஆவது திருத்தத்தை ரத்து செய்தல், சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுதல் மற்றும் தேசிய பாதுகாப்பு சபையை ஸ்தாபித்தல் உள்ளிட்ட பல ஜனநாயக அம்சங்கள் இந்த பிரேரணையில் அடங்கியுள்ளன.

இந்நிலையில் நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வது குறித்து ஜனாதிபதியும் கலந்துரையாடி வருவதாகவும் நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு முன்னைய அரசாங்கங்களும் ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகார முறைமையை நீக்குவதாக தெரிவித்திருந்தாலும் அது நடைமுறைக்கு வரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

000

Related posts: