நிறைவேற்று அதிகாரத்தைத் நான் இதுவரை பயன்படுத்தவில்லை – ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, May 21st, 2020

நிறைவேற்று அதிகாரத்தைத் தாம் இதுவரை பயன்படுத்தவில்லை என்றும், தேவைப்படின் அதனைப் பயன்படுத்தத் தயாராகவே இருப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் “அரசமைப்பின்படியே நான் செயற்பட்டுள்ளேன். அரசியல் காரணங்களை வைத்து எனக்கு அழுத்தங்களை வழங்க எவரும் முயற்சிக்கக் கூடாது.

நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு நீதிமன்றம் சொன்னாலும் நான் மீண்டும் ஒத்திவைப்பேன். அல்லது கூட்டும் வர்த்தமானியை விடுத்து மீண்டும் கலைப்பேன்.

இந்த நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முடியும் வரைக்கும் வேண்டுமானால் அப்படிச் செய்யலாம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் அரசமைப்பின்படி என்ன செய்ய முடியுமோ அதனை நான் செய்வேன்.

நாட்டின் தற்போதைய நிலைமையில் யாரும் தேவையற்ற அரசியலை செய்யக் கூடாது” – என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: