நிறைவேற்றப்பட்ட சட்டங்களை நடைமுறைப்படுத்துங்கள் : தேர்தல் ஆணையத்திற்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தல்!

Monday, May 4th, 2020

நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையைப் பின்பற்ற வேண்டியது அவசியம் என்று தேர்தல் ஆணைக்குழுவிற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது

குறித்த அறிவுறுத்தலை சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு செயலாளர் நிஷாரா ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

விடுமுறை நாட்களாகக் கருதப்படும்  16, 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டது தெர்டர்பில் பல்வேலறு தரப்புகளிடையே கருத்து வேறுபாடுகள் இருந்துவந்ததை அடுத்து அவ்விடயம் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு சட்டமா அதிபரிடம் அலோசரைன கோரியிருந்தது.

இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் சட்டமா அதிபர் இதனை தெரிவித்துள்ளார் என சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு செயலாளர் நிஷாரா ஜயவர்த்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: