நிறைவு பெற்றது ரியோ ஒலிம்பிக்!

ரியோ நகரில் உள்ள மரக்கானா மைதானத்தில் ஒலிம்பிக் போட்டிகள் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது.
விழாவை மிகச் சிறப்பாக நடத்திக் காட்டியதற்காக, தன்னுடைய நகரம், நாடு மற்றும் நாட்டு மக்கள் குறித்து பெருமைப்படுவதாக ரியோ ஒலிம்பிக் விழா குழுவின் தலைவர் கார்லோஸ் ஆர்தர் நூஸ்மன் கருத்து தெரிவித்துள்ளார். அற்புதமான விளையாட்டுகள், அற்புதமான நகரில் நடைபெற்றதாக சர்வதேச ஒலிம்பிக் அமைப்பின் தலைவர் தோமஸ் பேக் கருத்து தெரிவித்துள்ளார்.
அடுத்த (2020-ம் ஆண்டு) ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் நடைபெற உள்ள நிலையில், ஒலிம்பிக் கொடி ஜப்பானிடம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ஜப்பானியர்களின் உருவாக்கமான பிரபல வீடியோ கேம் பாத்திரமான சூப்பர் மரியோவின் அலங்காரத்தில் மேடையில் தோன்றினார். பிரேசிலின் சம்பா நடன ஒலிகள் மற்றும் பிரபல தெரு திருவிழா பாடல் இசையுடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.
Related posts:
|
|