நிறைகளை உறுதி செய்ய சந்தைக்கு வெளியே தராசு – சாவகச்சேரி நகரசபை தீர்மானம்!

Friday, October 2nd, 2020

சாவகச்சேரி நகரசபையின் மீன் சந்தைக்கு வெளியே தராசு ஒன்றினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வைப்பதற்கு சாவகச்சேரி நகரசபை தீர்மானித்துள்ளது.

மீன் சந்தையில் வியாபாரிகள் சிலர் நிறையினைக் குறைத்து ஏமாற்றி மீன் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் சிலர் நகரசபை உறுப்பினர்களுக்கு சுட்டிக்காட்டினர்.

இதனை அடுத்து நகரசபை உறுப்பினர்கள் மீன் சந்தைக்கு வெளியே தராசு ஒன்றினை வைப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

சந்தையில் மீனை கொள்வனவு செய்யும் பொதுமக்கள் நிறை குறித்து சந்தேகம் இருப்பின் குறித்த தராசில் நிறையை அளவிட முடியும்.

Related posts: