நிறுவனங்களின் தேவைக்கமைய சேவைமுடிவுறுத்தப்படும் ஊழியர்களுக்கான இழப்பீடு 25 இலட்சமாக அதிகரிப்பு – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

தனியார்துறை மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் நிறுவன சேவையாளர்கள், நிறுவனங்களின் தேவைப்பாடுகளுக்கு அமைய சேவையில் இருந்து முடிவுறுத்தப்பட்டால் செலுத்தப்படும் இழப்பீட்டு தொகையானது மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, குறித்த சேவையாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகையானது 25 இலட்சம் ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 25 ஆம் திகதி தொழில் ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்..
இதுவரை காலமும் அதற்கான இழப்பீட்டு தொகையாக 12 இலட்சத்து 50,அயிரம் ரூபா வழங்கப்பட்டு வரும் நிலையில், அந்த தொகையானது போதுமானதாக இல்லை என தொழிற்சங்கங்கள் தெரிவித்திருந்தன.
இதேவேளை, அதிகரிக்கப்பட்டுள்ள இழப்பீட்டு தொகையினை செலுத்தும் நடைமுறை எதிர்வரும் 19 ஆம் திகதிமுதல் அமுலாகவுள்ளதாகவும் தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|