நிர்வாக முடக்கலில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு இம்மாத வேதனம் வழங்கப்படமாட்டாது என்ற செய்தி பொய்யானது – ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவிப்பு!

Friday, May 6th, 2022

இன்று நிர்வாக முடக்கலில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு வேதனம் வழங்கப்பட மாட்டாது என வெளியாகும் செய்தி முற்றிலும் பொய்யானது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்றையதினம் நாடளாவிய ரீதியில் பொது நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

இந்நிலையில், இன்று நிர்வாக முடக்கலில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு மே மாதத்துக்கான வேதனம் வழங்கப்படமாட்டாது என சமூகவலைத்தளங்களில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் கடிதத் தலைப்பில் செய்தியொன்று பகிரப்பட்டிருந்தது.

எனினும், குறித்த அறிவிப்பு பொய்யானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விளக்கமொன்றை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: