நிர்வாகம் மற்றும் தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக சந்தன விக்ரமரட்ன!

Monday, July 25th, 2016

நிர்வாகம் மற்றம் தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரட்னவை தேசிய பொலிஸ் ஆணைக்குழு நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிர்வாகம் மற்றும் தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபராக நீண்ட காலம் கடமையாற்றிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் அண்மையில் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார். இந்த வெற்றிடத்திற்காக பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரட்னவை தேசிய பொலிஸ் ஆணைக்குழு நியமித்துள்ளது.

இந்தப் பரிந்துரை தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் இது குறித்து பொலிஸ் மா அதிபர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரட்ன, தெற்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பாக கடயைமாற்றி வருகின்றார்.

சந்தன விக்ரமரட்ன புதிய பதவியை ஏற்பதனால் வெற்றிடமாகும் பதவிக்கு வடக்கிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் W.S.U.பெர்னாண்டோ நியமிக்கப்பட உள்ளார்.நிர்வாகம் மற்றும் தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு முத்தரப்பு போட்டி நிலவியது.

சந்தன விக்ரமரட்ன, எஸ்.எம்.விக்ரமசிங்க மற்றும் ஜகத் அபேசிறிகுணவர்தன ஆகிய பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.இதில் சந்தன விக்ரமரட்ன தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்

Related posts: