நிர்ணய விலையை விட அதிகமான விலைக்கு காய்கறிகளை விற்ற வியாபாரிகள் கைது – நுகர்வேர் அதிகார சபை!

Friday, March 27th, 2020

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்த கொழும்பு புறக்கோட்டை மெனிங் சந்தையின் நான்கு வியாபாரிகளை நுகர்வேர் அதிகார சபை இன்று கைது செய்துள்ளது.

150 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்த ஒரு கிலோ கரட்டை 450 ரூபாவுக்கும், 150 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்த ஒரு கிலோ கறி மிளாகாயை 375 ரூபாவுக்கும் 100 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்த ஒரு கிலோ தக்காளியை 250 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளதாக அதிகார சபை கூறியுள்ளது.

கைது செய்யப்பட்ட வியாபாரிகள் மேலதிக விசாரணைகளுக்காக கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனவும் நுகர்வோர் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

மேலும் இது போன்ற அதிகரித்த விலைக்கு பொருட்கள் விற்பனை செய்த சம்பவங்கள் நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்றுள்ளபோதும் அது தொடர்பில் சில மெத்தனப் போக்குகள் இருந்துவருகின்றமையால் மக்கள் பல அசௌகரியங்களை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: