நிர்ணய விலையில் நெல்லை கொள்வனவு செய்ய ஆலை உரிமையாளர்கள் இணக்கம்!

Thursday, July 22nd, 2021

அரசாங்கத்தின் நிர்ணய விலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் சகல அரிசி ஆலை உரிமையாளர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே ஆகியோருடன், நடத்திய பேச்சுவார்த்தையில் அரிசி ஆலை உரிமையாளர்கள் இந்த இணக்கப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

இதற்கமைய, ஒரு கிலோ நாட்டு நெல்லை 50 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா நெல்லை 52 ரூபாவுக்கும், ஒரு கிலோ கீரி சம்பா நெல்லை 55 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: