நிரூபித்து காட்டினால், எந்த நேரத்திலும் பதவி விலக தயார் – சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவிப்பு!

நாட்டில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள வைத்தியர்களுக்கு எவ்வித அநீதியும் இழைக்கப்படவில்லை என சுகாதார அமைச்சர் கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் – வைத்தியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில், பதவி உயர்வுகள் உள்ளிட்ட விவகாரங்களில் அரசியல் தலையீடுகள் இல்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும், தாம் சம்பந்தப்பட்டுள்ளதாக யாரேனும் கூறினால், அதனை நிரூபித்து காட்டினால், எந்த நேரத்திலும் பதவி விலக தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காலியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
5 ஆம் திகதிமுதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம்!
கலைப்பீடத் தடை நீக்கப்படும் கூட மாணவர்கள் விரிவுரைக்கு வரவில்லை - யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்!
மழையுடனான வானிலை மேலும் தொடரும் - வடக்கு கிழக்கு மக்களுக்கு வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!
|
|