நிரந்தர வீடுகளை பெற்றுத்தாருங்கள் – ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் திருமலை நீனாக்கேணி கிராம மக்கள் கோரிக்கை!

தமது பகுதியில் வாழும் வறிய மக்களின் நிலைமைகளை கருத்திற்கொண்டு நிரந்தர வீடுகளை அமைப்பதற்கான உதவிகளை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நீனாக்கேணி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த பகுதியின் நீனாக்கேணி கிராம அபிவிருத்திச் சங்கம் விடுத்த அழைப்பின் பெரில் குறித்த பகுதி மக்களது நிலைமைகளை நேரில் சென்று ஆராய்ந்தறிந்தகொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் திருகோணமலை மாவட்டப் பிரதிநிதியான புஸ்பராசாவிடமே குறித்த கோரிக்கையை அப்பகுதி மக்கள் முன்வைத்துள்ளனர். கையளித்துள்ளார்.
மேலும் தமது பகுதியில் மலசலகூடவசதி , வீதி புனரமைப்பு மற்றும் குடிநீர்வசதி உள்ளிட்ட பல்வேறுபட்டகோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் குறித்த சங்கத்தின் தலைவர் விக்னேஸ்வரன் கட்சியின் பிரதிநிதி புஸ்பராசாவிடம் கையளித்துள்ளார்.
மக்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட புஸ்பராசா செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் குறித்த விடயங்களை தெரிவித்து அவற்றை தீர்த்துவைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளதாக தெரிவித்திருந்தார்.
Related posts:
|
|