நிரந்தர வீடுகளை பெற்றுக்கொள்ள உதவுமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் அரியாலை பூம்புகார் பகுதி மக்கள் கோரிக்கை!
Thursday, October 20th, 2016மழைகாலம் நெருங்கியுள்ளதால் தமது பகுதி குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகும் அபாயம் அதிகளவில் உள்ளதால் தாம் தற்போது வாழும் குடிசைகளை நிரந்தரமான வீடுகளாக அமைப்பதற்கு வீட்டுத்திட்டங்களை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்துதருமாறு அரியாலை பூம்புகார் பகுதி மக்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நல்லார் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவிந்திரதாசனை சந்தித்த குறித்த பகுதி மக்கள் தாம் எதிர்கொள்ளும் இடர்பாடுகளையும் துன்பங்களையும் எடுத்துக்கூறியபோதே குறித்த விடயத்தை வலியுறுத்தியுள்ளனர்.
நீண்டகாலமாக தாங்கள் குடிசை வீடுகளில் வாழ்ந்துவருவதனால் ஒவ்வொரு வருடமும் மாரிகாலங்களில் மழைநீரின் தாக்கத்தால் பொரிதும் பாதிக்கப்பட்டுவருவதாகவும் தமது வாழிடங்களை ஒரு நிரந்தரமானதும் பாதுகாப்பு கொண்டதுமானதாக அமைப்பதற்கு ஏற்பாடுகளை செய்து தருமாறும் கோரிக்கை விடுத்ததுடன் தாம் பொருத்த வீடுகளை பெற்றுக்கொள்வதற்கும் தயாராக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதி மக்களது நிலைமைகளை ஆராய்ந்தறிந்துகொண்ட இரவிந்திரதாசன் அவர்களது பிரச்சினைகளை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினது கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|