நிரந்தர வீடுகளை அமைப்பதற்கு உதவிகளை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கொக்குவில் கல்திட்டி பகுதி மக்கள் கோரிக்கை!

நீண்டகாலமாக தமக்கு நிரந்தர வீடுகள் அமைப்பதற்கான உதவித் திட்டங்கள் கிடைக்கப் பெறாமையினால் தாம் அதிகளவான அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வாழ்ந்து வருவதால் தமக்கான நிரந்தர குடியிருப்புகளை அமைத்து தருவதற்கு ஏற்பாடுகளை செய்து தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கொக்குவில் கல்திட்டி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்றையதினம்(03 கல்திட்டி பகுதி மக்களின் பிரச்சினைகளை ஆராயும்முகமாக குறித்த பகுதிக்கு நேரில் சென்றிருந்து ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசனிடமே மேற்குறித்த கோரிக்கையை மக்கள் விடுத்துள்ளனர்.
மேலும் தாங்கள் வாழ்ந்துவரும் குடியிருப்பு நிலங்கள் அதிகமானவற்றிற்கு காணி உரிமங்கள் இன்மையால் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற உதவித்திட்டங்களை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் உரிமங்களை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுதருமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மக்களது கோரிக்கைகளை ஆராய்ந்தறிந்தகொண்ட இரவீந்திரதாசன் இது தொடர்பாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினது கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|