நிரந்தர நியமனம் கோரி தொண்டர் ஆசிரியர்கள் உண்ணாவிரதம்!

Monday, August 1st, 2016

தமக்கு நிரந்தர நியமனம் வழங்க வலியுறுத்தி, வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள், உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

இன்று காலை 09.30 அளவில், வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக ஒன்று கூடிய அவர்கள், பின், ஆளுநர் செயலக வாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

வட மாகாணத்தில் 1300 தொண்டர் ஆசிரியர்கள் பாடசாலைகளில் எந்தவித கொடுப்பனவுகளுமின்றி சேவை செய்து வருகின்றார்கள்.  பல போராட்டங்களை முன்னெடுத்தும், எந்தவித முடிவுகளும் கிடைக்காத நிலையில், வடமாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், நல்லூர், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மடு, துணுக்காய், தீவகம் உள்ளிட்ட 12 வலயத்தைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்களும் இதில் கலந்து கொண்டனர்.

4

2

Related posts: