நியூசிலாந்து சென்றடைந்தார் பிரதமர்!  

Friday, September 30th, 2016

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நியூசிலாந்து நோக்கிப் பயணமான பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஓக்லண்ட் நகரை சென்றடைந்துள்ளார்.

அமைச்சர்களான ஹரீன் பெர்னாண்டோ, சாகல ரத்நாயக்க மற்றும் பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா உட்பட அரச அதிகாரிகள் சிலரும் பிரதமரின் நியூசிலாந்து விஜயத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.

நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீயினால், பிரதமரை உத்தியோகபூர்வமாக வரவேற்கும் வைபவம் நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து நியூசிலாந்து டன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதுடன், அந்த நாட்டிலுள்ள முக்கிய சில இடங்களையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பார்வையிடவுள்ளார்.

ranil-wickremasinghe

Related posts: