நியூசிலாந்து அணியுடனான 2 ஆவது மற்றும் டெஸ்ட் – வலுவான நிலையில் இலங்கை அணி!
Friday, September 27th, 2024இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி மைதானத்தில் நேற்று (26) ஆரம்பமானது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் தனஞ்ஜெய டி சில்வா துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுகளை இழந்து 306 ஓட்டங்களைப் பெற்றது.
மெத்யூஸ் 78 ஓட்டங்களுடனும், கமிந்து மென்டிஸ் 51 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
இப்போட்டியில் இலங்கை அணி சார்பில் 5ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அரைசதம் கடந்து அசத்திய கமிந்து மெண்டிஸ் புதிய வரலாறுச் சாதனை படைத்தார்.
அதன்படி இலங்கை அணியின் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரராக உருவெடுத்துள்ள கமிந்து மெண்டிஸின் 8ஆவது 50க்கும் அதிக ஒட்டங்கள் இதுவாகும்.
இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டிக்கு பிறகு தொடர்ச்சியாக 8 போட்டிகளில் அரைசதங்கள் அடித்த முதல் வீரர் எனும் சாதனையை கமிந்து மெண்டிஸ் படைத்துள்ளார்.
அதன்படி இலங்கை அணிக்காக இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 அரைசதங்கள் மற்றும் 4 சதங்களை கமிந்து மெண்டிஸ் விளாசி அசத்தியுள்ளார்
000
Related posts:
|
|