நியாயம் கிடைக்கும்வரை எமது போராட்டம் தொடரும் –  யாழ்.நகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள் தேரிவிப்பு!

Tuesday, November 15th, 2016

தமது நிரந்தர நியமனத்தை வலியுறுத்தி போராட்டத்திலீடுபட்டவரும் யாழ்.மாநகரசபை சுகாதார ஊழியர்கள் மற்றும் குடும்பலநல உத்தியோகத்தர்கள் இன்றையதினம் யாழ்.மாநகரசபை நுழைவாயிலை மறித்து நிர்வாக முடக்கல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்களின் போராட்டத்தை வலுச்சேர்க்கும் முகமாக இன்றைய தினம் குறித்த போராட்டத்தில் நல்லூர், திருநெல்வேலி, கிளிநொச்சி, சாவகச்சேரி ஆகிய நகரசபை சுகாதார ஊழியர்களும் தமது ஆதரவை தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதனால் ஆர்ப்பாட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் மாநகர  சபையினை முற்றுகையிட்டு நிர்வாக உத்தியோகத்தர்கள் உட்செல்லமுடியாத வகையில் மறியல் போராட்டத்தில் போராட்டகாரர்கள் ஈடுபட்டனர். இதனால் பொலிசாருக்கும், மாநகர சபை ஊழியர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

unnamed (1)

தமக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படும் வரை இந்த பணிப்புறக்கணிப்பு  போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என யாழ்.மாநகரசபை சுகாதார ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளதுடன், வடமாகாண சபை முதலமைச்சர் உள்ளிட்ட தமிழ் தேசிய சுட்டமைப்பின் தலைமைகள் அனைவரையும் கடுமையாக விமர்சித்ததுடன் தமது பிரச்சினை தொடர்பில் வடமாகாண  சபை  இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் கேள்வியெழுப்பியதுடன் அவர்கள் தமது பதவியினை பாதுகாப்பதிலேயே குறியாக இப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

unnamed

இதனிடையே தமது வாழ்வியல் பிரச்சனைகள் தொடர்பில் கடந்த காலங்களிலும் சரி தற்போதும் சரி ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே  அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருவதாக தெரிவித்த போராட்டகாரர்கள் அதன் வெளிப்பாடே அவர் பாராளுமன்றத்திலும் தற்போது நாம் எதிர்கொண்டுள்ள பிரச்சனை தொடர்பாக மத்திய அரசிடம் எடுத்து கூறி அதற்கான தீர்’வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் எனவும் சுகாதார தொழிலாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

unnamed (2)

மேலும், யாழ்.மாநகர சபையில் பணியாற்றிவரும் குறித்த, 127 சுகாதார ஊழியர்களும் கடந்த ஏழாம் திகதி முதல் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதுடன் இதன் விழைவாக யாழ் நகரப்பகுதி பெரும் சுகாதார பிரச்சினையை எதிர்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: