நியமனம் வழங்கப்பட்ட தொண்டராசிரியர்களுக்கு சேவை முன் பயிற்சி!

Thursday, July 26th, 2018

வடக்கு மாகாணத்தில் நியமனம் வழங்கப்பட்ட 639 தொண்டராசிரியர்களுக்கும் 3 வாரகாலம் சேவை முன் பயிற்சி வழங்கப்படவுள்ளது என்று வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றிய 457 பேருக்கு கடந்த 22 ஆம் திகதி தரம் 3 வகுப்பு 11 இல் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. அதேபோல் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி 182 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. இவ்வாறு இரு கட்டங்களாக நிரந்தர நியமனம் வழங்கப்பட்ட 639 ஆசிரியர்களுக்கும் குறித்த சேவை முன்பயிற்சி வழங்கப்படவுள்ளது.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் வதிவிட சேவைக்கால பயிற்சியாக குறித்த பயிற்சிகள் இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக வடக்கு மாகாண கல்வி அமைச்சு கல்வி அமைச்சின் செயலாளர் கெட்டியாராச்சியுடன் தொடர்புகொண்டு ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

குறித்த பயிற்சி நெறியில் மேற்படி ஆசிரியர்கள் பங்குகொள்வது கட்டாயமானது. ஏனெனில் குறித்த பயிற்சிநெறி அவர்களின் கற்பித்தல் பணிக்கு பெரிதும் உறுதுணையானது என்றார்.

Related posts: