நியமனம் பெற்ற ஆசிரியர்களில் 39 பேர் கடமைகளை பொறுப்பேற்கவில்லை!

கல்வியற் கல்லூரிகளில் இருந்து வெளியேறிய ஆசிரியர்களில் வடக்கு மாகாணத்துக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் 39 பேர் இதுவரை தமது கடமைகளைப் பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கல்வியற் கல்லூரிகளில் பயிற்சி பெற்று நடப்பாண்டில் ஆசிரிய நியமனம் கிடைத்த ஆசிரியர்களில் 207 பேர் வடக்கு மாகாணத்துக்குட்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர்களாக கடந்த வாரம் நியமிக்கப்பட்டனர். இவர்களில் வெளிமாகாணங்களைச் சேர்ந்த 39 பேரும் அடங்குவர். இவர்களே தமது கடமைகளைப் பொறுப்பேற்கவில்லை.
இவ்வாறு கடமைகளைப் பொறுப்பேற்காதவர்கள் வெளிமாகாணங்களைச் சேர்ந்தவர்களாகவுள்ளனர்.
மாகாணத்தின் 22 தேசிய பாடசாலைகளுக்கும் 63 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் கடமையைப் பொறுப்பேற்கவில்லை. வடக்கில் உள்ள தேசிய பாடசாலைகளுக்கு 63 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. ஆசிரிய பயிற்சிக்காக இணைக்கும் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள ஆசிரிய வெற்றிடங்களையும், ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் வெற்றிடங்களையும் கணக்கில் கொண்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி வடக்குமாகாணத்தில் 500 க்கு மேற்பட்ட ஆசிரிய வெற்றிடங்கள் உள்ள நிலையில் பயிற்சி முடித்த வடமாகாண ஆசிரியர்களில் அரைவாசிப் பேருக்கே வடக்கு மாகாணத்துக்கு நியமனம் வழங்கப்பட்டது. மீதிப் பேர் வெளிமாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டிருந்தனர்.
வெளி மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமது மாகாணங்களிலும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு வடக்கிலும் நியமனங்களை வழங்குமாறு கல்வி அதிகாரிகளால் கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.
Related posts:
|
|