நியமனம் கிடைக்கப் பெறாதவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பின் நீதி கிடைக்க நடவடிக்கை – ஜனாதிபதி!

Saturday, December 2nd, 2017

உரிய போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி நியமனம் கிடைக்கப் பெறாதவர்களின் எதிர்ப்பு தொடர்பாக கவனம் செலுத்திய ஜனாதிபதி ஏதேனும் வகையில் அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பின் அது தொடர்பாக விசாரணையொன்றினை மேற்கொண்டு தவறினை சீர்செய்து அவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இந்த துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு உரிமைகளையும் வரப்பிரசாதங்களையும் உரியவாறு வழங்கி உத்தியோகத்தர்கள் சிறந்த சேவையை வழங்கக்கூடிய பின்னணியினை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார

தொழில், தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யூ.பி.ஜே செனெவிரத்ன, அமைச்சின் செயலாளர் எஸ்.ஏ.என். சரணதிஸ்ஸ, தொழில் ஆணையாளர் நாயகம் ஏ.விமலவீர உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தொழில் திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்படவுள்ள 191 தொழில் உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின்  தலைமையில் ல் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநர்டு மண்டபத்தில் இடம்பெற்றது இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts: