நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டம் !

Monday, November 1st, 2021

நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.  

முன்பதாக வடக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக சுகாதாரத் தொண்டர்களாக பணியாற்றிய 970 பேரில் 349 பேருக்கு அவர்களது சேவை கால அடிப்படையில் அரச நியமனத்துக்கான நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது

அதில் ஏனையோரிற்கு  நியமனம்  வழங்கப்படாத நிலையில் தமக்கும் குறித்த நியமனத்தை வழங்குமாறு கோரி இன்றையதினம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்றலில் நியமனத்தில்  வழங்கப்படாத வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதார தொண்டர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாங்களும் நீண்ட காலமாக தொண்டு அடிப்படையில் சுகாதாரத் தொண்டர்களாக கடமையாற்றியிருக்கிறோம்  மொத்தமாக 970 பேர்  வடக்கு மாகாணத்தில் உள்ளோம்

ஆனால் 349 பேருக்கு மாத்திரமே நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டு தற்போது அவர்களுக்குரிய நியமனம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது எனினும்

நாம் வைக்கின்ற ஒரு கோரிக்கை என்னவென்றால் வடக்கு மாகாணத்தில் உள்ள 970 சுகாதாரத் தொண்டர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு தற்போது வடக்கு மாகாணத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியே இன்றையதினம் போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை

நீண்ட நாட்களாக நிரந்தர நியமனம் இன்றிக் கடமையாற்றி வருகின்ற சுகாதார தொண்டர்ளுக்கு விரைவில் நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு உறுதியளித்திருந்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கடந்த மாதம் 29 ஆம் திகதியன்று சந்திப்பின்போதே, குறித்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

சுகாதார தொண்டர் விவகாரத்தினை கடந்த காலங்களில் சில அரசியல் தரப்புக்கள் குறுகிய அரசியல் நோக்குடன் கையாண்டமையினால் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், குறித்த சந்திப்பின் போது,அவ்விடயத்தினை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்ற கடற்றொழில் அமைச்சர், சேவை மூப்புக் கவனத்தில் கொள்ளும் வகையில் மீண்டும் புதிதாக நேர்முகத் தேர்வுகள் வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்பட்டு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்

அதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடி சுகாதார தொண்டர்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தன்னுடைய செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: