நியமனத்தில் பாரபட்சம் – வெளிவாரிப் பட்டதாரிகள் மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு!

Thursday, July 25th, 2019

பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பில் வெளிவாரிப் பட்டதாரிகளைப் புறக்கணித்தமை ஓர் அடிப்படை மனித உரிமை மீறல் என தெரிவித்து பாதிக்கப்பட்ட வெளிவாரிப் பட்டதாரிகள் யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணையகத்தில் நேற்று முறைப்பாடு செய்யதுள்ளனர்.

மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் யாழ்ப்பாண இணைப்பாளரிடம் தமது முறைப்பாட்டை அவர்கள் கையளித்துள்ளனர்.

நாடுமுழுவதும் வேலையற்ற பட்டதாரிகள் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் முதலாம் திகதி நியமனம் வழங்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள 16 ஆயிரத்து 800 பேரின் பெயர்ப் பட்டியல் சகல மாவட்டச் செயலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

அவற்றில் பல்கலைக் கழக உள்வாரிப் பட்டதாரிகள் மட்டுமே உள்வாங்கப்பட்டுள்ள நிலையில், வெளிவாரிப் பட்டப்படிப்பு மாணவர்கள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

அத்துடன் இந்த விடயமானது அரசமைப்பின் உறுப்புரிமை 12.2 இனை மீறும் செயலாக காணப்படுவதனால் இதற்கான உரிய தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என பாதிக்கப்பட்ட வெளிவாரிப் பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts: