நிதி வசதியின் இரண்டாவது தவணைக்கான அனுமதியை சர்வதேச நாணய நிதியம் இன்று வழங்கும் – ஜனாதிபதி உறுதி!

Tuesday, December 12th, 2023

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாவது தவணைக்கான அனுமதியை சர்வதேச நாணய நிதியம் இன்று வழங்குமென ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி இது தொடர்பில் கருத்து வெளியிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு 48 மாதங்களுக்கு நீடிக்கப்பட்ட கடன் வசதியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் முதலாவது மீளாய்வு நடவடிக்கைகளுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு இன்று இடம்பெற்றது.

எதிர்பார்த்த அரச வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தினால் இந்தகடன் வழங்கப்பட்டுள்ளதாக பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் படி சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கு தீர்மானம் மேற்கொண்டிருந்தது.

இதற்கமைய, முதல் தவணையாக 330 மில்லியன் அமெரிக்க கடனுதவி முன்னதாக இலங்கைக்கு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: