நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு அஞ்சத் தேவையில்லை – அமைச்சர் ராஜித சேனாரட்ன!

Thursday, February 16th, 2017

 

நாட்டின் சுகாதாரத்துறையை மேம்படுத்துவதற்காக பாடுபடும் போது நிதி மோசடி விசாரணைப் பிரிவு குறித்து அஞ்ச வேண்டிய அவசியமில்லை என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு அஞ்சி ஒரு சிலர் தமது கடமைகளை மந்த கதியில் மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு அஞ்சி செயற்பட வேண்டியதில்லை எனவும் அது தொடர்பான முழுப் பொறுப்பினையும் தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

rajitha-senaratne_51

Related posts: