நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க விசேட மேல் நீதிமன்றம்!

ஊழல் மோசடிகள் மற்றும் நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக விசேட மேல் நீதிமன்றம் அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது விசேட மேல் நீதிமன்றங்களை அமைப்பதற்காக பிரேரணையினை நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள முன்வைத்தார். குறித்த இந்த பிரேரணை தொடர்பில் ஆராயப்பட்டதுடன் இதற்கு அமைச்சரவை அங்கீகாரமும் வழங்கியது.
மூன்று நீதிபதிகளைக் கொண்ட மூன்று தீர்ப்பாயங்கள் இதற்கிணங்க அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
துப்பாக்கி சூட்டினால்தான் மாணவன் உயிரிழந்தார் - நீதிபதி அறிக்கை!
கொலையாளிகளின் மீது சிறைச்சாலையில் தாக்குதல்!
அமைச்சரவை குழுவின் பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
|
|