நிதி மோசடிகளை விசாரிக்கும் ட்ரயல் அட்பார் நீதிபதிகள் நியமனம்!

நிதி மோசடிகள் மற்றும் இலஞ்ச ஊழல்கள் பற்றி விசாரணை நடத்துவதற்கான நிரந்தர நீதாய மேல் நீதிமன்றின் (ட்ரயல் அட் பார்) நீதிபதிகளை பிரதம நீதியரசர் பிரியசாந் டெப் நேற்று நியமித்தார். அவர்கள் மூவரும் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்கள்.
நிதி மோசடிகள் மற்றும் இலஞ்ச ஊழல்கள் பற்றி விசாரணை நடத்துவதற்காக நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் அமைப்பதற்கான சட்டம் கடந்த மாதம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
இதற்கமைய பெரும் ஊழல் மோசடிகள் மற்றும் திருட்டு சம்பவங்கள் சம்பந்தமாக விசாரணை செய்வதற்கு மூன்று நீதிபதிகள் அடங்கிய நிரந்தர நீதாய மேல் நீதிமன்றின் மூன்று நீதிபதிகளை நியமிக்க பிரதம நீதியரசரிடம் நீதி அமைச்சுக் கோரியிருந்தது.
இந்த நிலையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் சம்பத் அபயகோன், சம்பத் விஜயரட்ண, சம்பா ஜானகி ராஜரட்ண ஆகியோர் சிறப்பு நீதாயத்துக்கான நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.
நிதி மோசடிகள் மற்றும் இலஞ்ச ஊழல்கள் பற்றி விசாரணை நடத்துவதற்காக நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் வரும் ஜீலை 15 ஆம் திகதி வழக்கு விசாரணைகளை ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|