நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்!

Wednesday, May 25th, 2022

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று (25) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

முன்பதாக நிதியமைச்சர் பதவிக்காக முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் சார்பிலிருந்து எவ்வித பதிலும் கிடைக்காத நிலையில் பிரதமர் ரணில் இன்றையதினம் பதவியேற்றுள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் பாரிய பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு நிதியமைச்சர் ஒருவரை நியமிக்க வேண்டிய தேவை காணப்படும் நிலையிலேயே இந்த பதவியேற்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: