நிதி நெருக்கடிக்கு தீர்வுகாண இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்டதைப் போன்று சீனா மற்றும் ஜப்பானிடமிருந்தும் பெற்றுக்கொள்ள ஆலோசனை!

நாட்டில் தற்போது நிலவும் நிதி நெருக்கடிக்கு தீர்வுகாண இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்டதைப் போன்ற நிவாரணப் பொதிகளை சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிடம் இருந்து பெற்றுக்கொள்ளவது தொடர்பான யோசனையை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, அமைச்சரவையில் முன்வைத்துள்ளதாக தெரியவருகிறது.
10 பக்கங்களைக் கொண்ட இந்த யோசனையை, நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதுடன், இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்த தயார் எனவும் தெரியப்படுத்தியுள்ளார்.
இலங்கை தற்போது பெற்றுக்கொண்டுள்ள கடனில் 20 வீதமான கடன் ஜப்பான் மற்றும் சீனாவிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தை மூலம் பெறப்பட்டுள்ள கடனை செலுத்துவதற்கான காலத்தை நீடித்துக்கொள்வது, செலுத்துவதற்கான நிவாரண காலத்தை பெற்றுக்கொள்வது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|