நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த புதிய அதிகார சபை – நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவிப்பு!
Friday, December 29th, 2023நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை மத்திய வங்கி சரியான முறையில் மேற்கொள்ளாததால், எதிர்காலத்தில் புதிய அதிகார சபையொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மத்திய வங்கியினால் பொருளாதாரத்தை உரிய முறையில் நிர்வகிக்க முடியாததன் காரணமாகவே தற்போதைய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அத்தோடு வரி விதிப்பினால் குறுகிய கால துன்பங்களை அனுபவித்தாலும் நீண்டகால நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
மானிய மின்கட்டண விவரம் அறிவிப்பு!
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகள் நாளைமுதல் முன்னெடுப்பு!
ரஷ்யாவுக்கு தபால் மூலம் பொருட்கள் - பொறுப்பேற்பதற்கு தபால் திணைக்களம் தீர்மானம்!
|
|