நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க – சீனாவின் துணை நிதி அமைச்சர் லியோ மின் சந்திப்பு – இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு சீனா முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் எனவும் உறுதியளிப்பு!

நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மற்றும் சீனாவின் துணை நிதியமைச்சர் லியோ மின் ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 57 ஆவது வருடாந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க ஜோர்ஜியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு சீனா முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என அந்த நாட்டு துணை நிதியமைச்சர் குறிப்பிட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கூறியுள்ளார்
000
Related posts:
ஓய்வு பெறுகிறார் பிரதம நீதியரசர்!
ஜனாதிபதி செயலணியில் யாழ். பல்கலையின் துணைவேந்தர் சி. ஶ்ரீசற்குணராஜா நியமனம்!
பால் மா தட்டுப்பாட்டுக்கு தீர்வு - குறையின்றி நாடு முழுவதிலும் ஹைலண்ட் பால் மாவினை விநியோகிக்க நடவடி...
|
|