நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க  பிரித்தானியா விஜயம்!

Wednesday, March 22nd, 2017

பிரித்தானிய த பேங்கர் சஞ்சிகையின்  தரவரிசையின் படி நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆசிய பசுபிக் வளையத்தின் சிறந்த நிதி அமைச்சர் விருதினை பெற்றுக்கொள்ள பிரித்தானியா செல்லவுள்ளாதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்து அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்படுவதாவது,

பிரித்தானியாவின் த பேங்கர் சஞ்சிகையில் ஆசிய பசுபிக் வளையத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த  நிதி அமைச்சராக பெயரிடப்பட்டுள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கான விருது வருகின்ற 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிரித்தானியாவில் வைத்து அவருக்கு வழங்கப்படவுள்ளது.

புதிய பொருளாதார புரட்சி ஒன்றிற்காக இலங்கை மக்கள் மத்தியில் உள ரீதியிலானா மாற்று சிந்தனைகளை தோற்றுவிக்கும் வகையிலான பொருளாதார கொள்கையினை நடைமுறைப்படுத்தியமைக்கா முதலமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு இவ்விருதினை வழங்கவுள்ளதாக் பிரித்தானிய த பேங்கர் சஞ்சிகை அறிவித்துள்ள நிலையில், விருதை பெற்றுக்கொள்வதற்காக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நாளை பிரித்தானியாவிற்கு செல்லவுள்ளார்.

Related posts: