நிதி அமைச்சருடன் வரவு செலவுத் திட்டம் குறித்து பேசுங்கள்!- அமைச்சர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை!

Monday, November 21st, 2016

வரவு செலவுத் திட்ட பிரச்சினைகள் குறித்து நிதி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இம்மாதம் 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் தொடர்பில் சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுக்கு ஏதேனும் பிணக்குகள் காணப்பட்டால் அது குறித்து, நிதி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி இணக்கப்பாட்டை எட்டுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தில் சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களின் அமைச்சுக்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக, அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பிற்கு முன்னதாக இது குறித்து நிதி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளுமாறு ஜனாதிபதி, சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொழில், சமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு அமைச்சுக்களில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக அந்த உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

maithiripala-55445d1

Related posts: