நிதியை பெற்றுக்கொடுப்பதில் தாமதம் – உயர்நீதிமன்றிற்கு செல்வுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவிப்பு!
Monday, February 13th, 2023தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கான நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்தும் தாமதம் ஏற்படும் பட்சத்தில் உயர்நீதிமன்றினை நாட வேண்டிய நிலை ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்குரிய பாதீட்டில் 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 770 மில்லியன் ரூபாவே தற்போது வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்லுக்கான செலவினங்களை 03 அல்லது 04 பில்லியன் ரூபாவில் ஈடு செய்ய முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா அறிவித்துள்ளார்.
இதேவேளை, அஞ்சல் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டு விநியோகம் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இதுவரை வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, வாக்குச்சீட்டு அச்சிடும் பணிக்கான செலவீனத்திற்கு 40 மில்லியன் ரூபாய் அரச அச்சக திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதியானது 10 மாவட்டங்களுக்குரிய வாக்கு சீட்டுக்களை அச்சிடுவதற்கே போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய நிலை குறித்து சட்டமா அதிபரிடம் வியாக்கியானம் கோரப்பட்டுள்ளது.
அவரது அனுமதி கிடைக்கப்பெற்றால் நாளைய தினம் வாக்குசீட்டுக்களை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அரச அச்சக திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|