நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக மீண்டும் ஒரு முறைப்பாடு!

Monday, January 2nd, 2017

நாட்டினுள் நடைபெறும் இலஞ்ச ஊழல்களையும் துஷ்பிரயோகங்களையும் ஒழிக்க என ஆட்சிபீடமேறிய நல்லாட்சி அரசு தற்போது பொய்யுரைப்பதாகவே தோன்றுகின்றதாக மக்கள் உரிமைகளை பாதுகாப்பதற்கான அறக்கட்டளை அமைப்பு குற்றஞ் சாட்டியுள்ளது.

பொதுமக்களின் வாழ்க்கைச் சுமையினை குறைப்பதாகக் கூறிய நல்லாட்சி தற்போது இருந்ததினையும் விட பொருட்களின் விலைவாசிகளை உயர்த்தியுள்ளது எனலாம்.

பொதுமக்களை குறியாய் வைத்து அரசியல்வாதிகள் தங்களது வயிற்றினை நிரப்பும் நிலையே தற்போது நிலவுகின்றது. இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு எவ்வித நலன்களையும் வழங்காத நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் குறுகிய காலத்தில் அளவுக்கு அதிகமாகவே சொத்துக்களை குவித்திருப்பது குறித்து ஆராய வேண்டியதொன்றே எனத் தெரிவித்துள்ள குறித்து அமைப்பானது;

நாளை(03) காலை 11 மணியளவில் மக்கள் உரிமைகளை பாதுகாப்பதற்கான அறக்கட்டளை அமைப்பானது நிதியமைச்சர் ரவிக்கு எதிராக இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை முன்வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

1_2

Related posts: