நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியா பயணமானார் – ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்படும் எனவும் எதிர்பார்ப்பு!

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று பிற்பகல் இந்திய தலைநகர் டெல்லி நோக்கிப் பயணமானார்.
நிதி அமைச்சரின் இந்த இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில், திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும் இணைந்துள்ளார்.
இந்தியாவுடனான ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நோக்கில் அவர் இந்தியா சென்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடன் மூலம் இலங்கைக்கு அரிசி, கோதுமை மா மற்றும் சீனி போன்ற அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியமென எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் தற்போது நிலவிவரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு உதவுவதற்காக இந்திய அரசாங்கம் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
மருந்து வகைகளில் 85 வீத தயாரிப்பு இலங்கையில் - அமைச்சர் ராஜித சேனாரத்ன!
திறந்த சந்தையில் சலுகை விலையில் உரம் வழங்க தீர்மானம்!
நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னரே தேர்தல் திகதி குறித்து கவனம் செலுத்தலாம் -தேர்தல்கள் ஆணைக்குழு...
|
|