நாவற்குழியுடன் மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவை  யாழ்.வரை ஆரம்பம்!

Saturday, October 28th, 2017

பாலத்தின் புனரமைப்புக் காரணமாக நாவற்குழியுடன் ஒரு வாரமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த புகையிரத சேவை வழமை போன்று யாழ்ப்பாணம் புகையிரதம் வரை ஆரம்பமாகின.

நாவற்குழிப் பகுதியில் காணப்பட்ட பாலம் புனரமைப்பதற்காக கடந்த 23 ஆம் திகதி முதல் புகையிரத சேவைகள் நாவற்குழி புகையிரத நிலையத்துடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. குறித்த பாலப் புனரமைப்பு வேலைகள் பூர்த்தியாகிய நிலையில் நேற்று முதல் சேவைகள் வழமைக்குத் திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வருகை தந்த யாழ்தேவி 4.20 மணியளவில் நாற்குழியை அடைந்த நிலையில் புதிய பாலத்தில் இடம்பெற்ற பூஜையினைத் தொடர்ந்து தனது பயணத்தைத் தொடர்ந்தது. இந்தியாவின் IRCON புகையிரத அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் நீண்டகால உத்தரவாதத்துடன் இப் புதிய பாலம் புனரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: