நாவற்குழியில் இராணுவச் சிப்பாய் தன்னைத் தானே சுட்டு தற்கொலை!

Thursday, July 22nd, 2021

இன்று அதிகாலை நாவற்குழி தெற்கு கெமுனு வோச் படைப்பிரிவு  படை முகாமில் கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிப்பாய் இராணுவத்தில் இணைந்து கடந்த 10 மாதங்களே ஆகியுள்ள நிலையில் வீட்டில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாகவே தற்கொலை புரிந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது

குறித்த சம்பவம் தொடர்பில் இராணுவ பொலிசார் மற்றும் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மரண விசாரணையின் பின்னர் உயிரிழந்த இராணுவ சிப்பாயின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக  இராணுவ தரப்பில் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts: