நாள் ஒன்றுக்கு 6 இலட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி அறிவிப்பு!

Saturday, February 6th, 2021

கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டவுடன், நாள் ஒன்றுக்கு 6 இலட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என கொரோனா கட்டுப்பட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமைமுதல் இதுவரை 1 இலட்சத்து 50, ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளார்.

மேலும் தடுப்பூசி பெற்றவர்கள் எந்தவொரு பெரிய பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்றும் 9 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போட அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி நாட்டை வந்தடைந்ததும் தடுப்பூசியை செலுத்துவதற்கு நாடளாவிய ரீதியில் 4,000 நிலையங்கள் நிறுவப்படும் என்றும் இதன்போது இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: