நாளை வெள்ளிக்கிழமை முன்னிரவு 8 மணிமுதல் மீண்டும் முடக்கப்படுகின்றது இலங்கை – ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு!

Thursday, April 23rd, 2020


எதிர்வரும் 24 ஆம் திகதி முன்இரவு 8 மணி முதல் நாடு தழுவிய ரீதியாக மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.


கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பொலிஸ் பிரிவுகளை தவிர்ந்த பகுதிகளில் கடந்த 20 ஆம் திகதி அதிகாலை 05 மணித் தொடக்கம் இரவு எட்டு மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தது. அத்துடன் கொழும்பு கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுல்படுத்தப்ட்டிருக்கும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவால் அறிவிக்கப்பட்டிருந்தது.


அத்துடன் குறித்த மாவட்டங்களுக்குள் பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளியேறவும் முற்றாகத் தடையும் விதிக்கப்பட்டிருந்தது.
எனினும், ஏனைய பகுதிகளில் தற்போது பகுதியளவில் தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி இரவு 8 மணி தொடக்கம் 27 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை மீண்டும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஊரடங்கு காலப்பகுதியில் அத்தியாவசியத் தேவைகளை முன்னெடுக்கவும் விவசாயத்தில் ஈடுபடவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் திருத்தமின்றி அமுல்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை வடக்கில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள போதும் கிளிநொச்சி மாவட்டத்தின் ஆளுகைக்குள் உள்ளடங்கும் பளை பிரதேச மக்களை அங்கிருந்து வெளியே செல்ல அனுமதிக்காத நிலைமை தொடர்வதாக அப் பகுதி மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.


குறிப்பாக பளைப் பகுதியில் இருந்து கிளிநொச்சி நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை திறந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட நீதி மன்ற வழக்கிற்கு அரச திணைக்கள தேவைகளுக்கு அத்தியாவசிய தேவைக்கு அல்லாத பொருட்கள் சேவைகளை பெற்றுக்கொள்ளச் செல்ல முடியாதுள்ளது எனவும் அவ்வாறு வருகின்ற பொதுமக்களை ஆனையிறவு சோதனை நிலையத்தில் வைத்து படையினர் செல்லவிடாது தடுத்து திருப்பி அனுப்புவதாகவும் மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.


பளை பிரதேசம் சிவில் நிர்வாக ரீதியாக கிளிநொச்சி மாவட்டத்துக்குள்ளும் இராணுவத்தின் நிர்வாக எல்லை ரீதியாக யாழ்ப்பாணத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக தாம் கிளிநொச்சிக்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை எனவும் மக்கள் தெரிவித்துள்ளதுடன் இதற்கான தீர்வை பெற்றுத்தர துறைசார் தரப்பினர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமத் என்றும் கோதரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: