நாளை வாக்காளர் தினம்!

வாக்குகளை பதிவு செய்யும் தினமாக ஜூன் மாதம் முதலாம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, ஜூன் மாதம் முதலாம் திகதி 18 வயதை பூர்த்தி செய்த சகல பிரஜைகளும் வாக்களிக்கத் தகுதி பெறுகிறார்கள்.
2017ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் மீளாய்வுகளை மேற்கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து கிராம உத்தியோகத்தர்களிடம் கையளிப்பதற்கான இறுதித் தினம் எதிர்வரும் வியாழக்கிழமையாகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது .நாடு பூராகவும் 14 ஆயிரம் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வாக்காளர் இடாப்புக்கள் மீளாய்வு செய்யப்படுவதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹம்மட் தெரிவித்துள்ளார்.
Related posts:
அத்தியவசியமான 47 வகை மருந்துகளின் விலை குறைப்பு!
மலசலகூடம் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை அதிகரிக்க கோரி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம்!
யாழில் மாணவன் மாயம் : கண்டால் உடன் அறிவிக்கவும்!
|
|