நாளை மேலதிக மின்தடை!

Wednesday, January 11th, 2017

ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு மேலதிகமாக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக  நாளை வியாழக்கிழமை யாழ்.பிரதேசத்தில் காலை 8.30 மணி தொடக்கம் 12.30 மணிவரை மீனாட்சிபுரம் வீதி, முத்தமிழ் வீதி, வில்லூன்றி, பண்ணைப் பிரதேசம், குருநகர், கொன்வேன்ட் பிரதான வீதி, கடற்கரை வீதி, குருநகர் ஜஸ் தொழிற்சாலை, சீநோர், சிறிலங்கா ஜஸ் தொழிற்சாலை, நிபாட் வலைத் தொழிற்சாலை ஆகிய இடங்களிலும் மதியம் 1மணியிலிருந்து மாலை 4.30 மணிவரை நாவற்குழி, தச்சன்தோப்பு, மறவன்புலா, தனங்கிளப்பு, கோயிலாக்கண்டி, கேரதீவு வீதி ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என மின்சாரப் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே நாளை காலை 8மணி முதல் 6.30 மணிவரை வவுனியாவில் தெற்கிலுப்பைக் குளம், தவசிக்குளம் ஆகிய இடங்களிலும் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1-Copy5-620x336

Related posts: