நாளை முதல் வானிலையில் மாற்றம்!

Saturday, February 2nd, 2019

நாட்டில் நாளை(03) முதல் மழையுடனான வானிலையில் சற்று அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, கிழக்கு, ஊவா, மற்றும் வடமத்திய, மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் எனவும், சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts: