நாளை முதல் அரச அலுவலகங்களில் நேர மாற்றம்!

பத்தரமுல்ல பிரதேசத்திலுள்ள அரச அலுவலகங்களில் நாளை திங்கட்கிழமை முதல் நேர மாற்றம் நடைமுறையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசாங்க நிர்வாக அமைச்சின் நிறுவனப் பணிப்பாளர் நாயகம் டபிள்யு.டி.சோமதாச தெரிவிக்கையில் இதற்கமைய, அலுவலக ஊழியர்கள் காலை 7.30 முதல் 9.15 வரை சேவைக்கு சமூகமளிக்க முடியும். பிற்பகல் 3.30 முதல் 5.00 மணி வரை அலுவலக பணிகளை பூர்த்தி செய்ததன் பின்னர் வெளியேற முடியும் என்றார்.
நிருவகத் தலைவர்களின் அங்கீகாரத்துடன் மூன்று மாதங்களுக்கு இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
பொதுமக்களின் சேவைக்கு தடை ஏற்படாத வகையில் புதிய அலுவலக நேரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிறுவனத் தலைமை அதிகாரிகளால் முடியும் என்று அரசாங்க நிர்வாக அமைச்சின் நிறுவனப் பணிப்பாளர் நாயகம் டபிள்யு.டி.சோமதாச மேலும் தெரிவித்தார்.
Related posts:
பொய்க்குற்றச்சாட்டு எனக் கூறி கொக்குவில் இந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
பயங்கரவாத தாக்குதல் - குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் ஜனாதிபதி!
பிரதமர் தலைமையில் புதிய அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணி ஆரம்பம்!
|
|