நாளை மின்சார விநியோகம் சீராகும்! – அரசாங்கம்
Wednesday, March 16th, 2016நாளை காலை முதல் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பும் என்று மின்சக்திதுறை அமைச்சர் ரஞ்சித சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும் நுரைச்சோலை அனல் மின்சார நிலையத்தின் பணிகள் உரிய முறையில் ஆரம்பிக்கப்படும் நிலையிலேயே இந்த இயல்பு நிலை ஏற்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். குறித்த அனல் மின்சார மையத்தின் தன்னியக்க உற்பத்தியில் ஏற்பட்ட பிரச்சினையே மின்சார தடைக்கான காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தற்போது நாட்டில் நேர அட்டவணையின்படி நாளொன்றிற்கு ஏழரை மணிநேர மின்சார விநியோகத்தடை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மத்திய வங்கி மோசடி விவகாரம் தொடர்பான அறிக்கைக்கு பிரதமர் பணிப்பு!
வடக்கில் சுட்டெரிக்கும் வெயில்: 20 நிமிடங்களுக்கு ஒரு தடைவ கட்டாயம் தண்ணீர் குடியுங்கள் - மருத்துவப...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட திரவ ஒக்சிஜன் தாங்கி திறந்துவைப்பு!
|
|