நாளை மாலை 5 மணிக்கு முன் காலி முகத்திடலை விட்டு வெளியேறவேண்டும் -போராட்டக்காரர்களுக்கு பொலிஸார் உத்தரவு!

Thursday, August 4th, 2022

காலிமுகத்திடலையும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களையும் சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை வெள்ளிக்கிழமை (5) மாலை 5 மணிக்கு முன்னர் தமது போராட்ட இடங்களிலிருந்து வெளியேறுமாறு கோட்டை பொலிஸார் அறிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அரச அல்லது நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அனுமதியற்ற கட்டுமானங்களை நிறுவி பயிர்களை பயிரிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மக்களின் பொருள் உரிமைகள் பறிக்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறும் போராட்டக்காரர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர் .

மேலும், ஆகஸ்ட் 5 ஆம் திகதி மாலை 5 மணிக்கு முன்னதாக அந்த இடத்தை விட்டு வெளியேற நடவடிக்கை எடுக்குமாறும், மேற்கண்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போராட்டக்காரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


பொதுவெளி திரையிடல், நாடகங்கள், கச்சேரிகளுக்கான அனுமதிப்பத்திர கட்டணங்கள் அதிகரிப்பு - எதிர்வரும் ஓகஸ...
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சீனா விஜயம் - சீன அதிபர் ஜின்பிங்குடனான சந்திப்பு மிகவும் முக்கியத்துவ...
கடந்த ஓராண்டில் மாத்திரம் சுமார் பத்து இலட்சம் மின்சார இணைப்புகள் துண்டிப்பு - காமினி வலேபொட தெரிவிப...