நாளை தீர்மானமிக்க கட்சித் தலைவர்கள் கூட்டம் – இன்றும் பல சந்திப்புகள் !

Sunday, July 10th, 2022

எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான தீர்மானமிக்க கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்று நாளை இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை முற்பகல் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

பதில் ஜனாதிபதி ஒருவரை நியமித்தல் மற்றும் சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்குதல் என்பன தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இன்றைய தினம் பல கட்சிகள் ரகசிய கலந்துரையாடல்களை நடத்துகின்றன.

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறுகிறது.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் தலைமையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, ஜே.வி.பியும் இன்று முற்பகல் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: