நாளை இலங்கை வருகிறார் சீன வெளிவிவகார அமைச்சர்!
Friday, January 7th, 2022திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொகுதிகள் தொடர்பான உடன்படிக்கை நேற்று மாலை கைச்சாத்திடப்பட்ட நிலையில், சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வேங்க் ஹி நாளை 8 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வருகைதரவுள்ளார்.
குறித்த விஜயத்தின் பொது சீன வெளிவிவகார அமைச்சர் இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 65 வது ஆண்டு பூர்த்தியாவதை முன்னிட்டு நடைபெறவுள்ள நிகழ்வில் கலந்துக்கொள்ள சீன அமைச்சர், இலங்கை வருவதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்திருந்தது.
இதனிடையே இலங்கைக்கான சீனத் தூதுவர் கடந்த மாதம் யாழ்ப்பாணம் உட்பட வடபகுதிக்கு விஜயம் செய்ததுடன் வட பகுதி மக்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் பல திட்டங்களை ஆரம்பித்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|